Thursday, February 24, 2011

நடுநிசி நாய்கள் -- விமர்சனம்

சைல்ட் அப்யுஸ் (Child Abuse) என்ற விஷயமே தமிழ் சினிமாக்கு ரொம்ப புதுசு. நம்மை பொறுத்தவரை பெண் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பாதது, வேலைக்கார பையனுக்கு சட்டை வாங்கி தராதது போன்ற விஷயங்களே நம்மை எல்லாம் சங்கடபடுத்தும். ஆனாலும் குழந்தைகளுக்கு எதிராக இந்த மாதிரி செக்ஸ் டார்ச்சர் பல இடங்களில் நடந்துட்டு தான் இருக்கு. இந்த மாதிரி ஒரு கதையை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் கொண்டு வந்த கவுதமுக்கு ஒரு சபாஷ்.

நெத்திபொட்டுல அடிச்ச மாதிரி கதை சொல்லுறதும் நம்ம சினிமாக்கு கொஞ்சம் புதுசு தான். (சிலர் இதுக்கு முன்னாடியே இப்படி கதை சொல்லி இருக்காங்க)படத்தோட ஒட்டத்தை தடுக்குற மாதிரி பாட்டும், படத்துக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாம வர சிரிப்பு காட்சிகளும் இல்லாம எடுத்ததுக்கு இன்னுமொரு சபாஷ்.

நம்ம சினிமாவிலும் சரி, கலாச்சாரத்திலும் சரி எல்லாமே இலைமறை காய் தான். முதலிரவு காட்சியை காட்டனும்னா ரெண்டு குருவிங்க முத்தம் குடுக்குறதை காட்டிட்டு விளக்கை அனைச்சிடுவாங்க.. வன்புணர்ச்சியை காட்டனும்னா ஒரு ஓநாய் இல்லை புலி ஆட்டை அடிக்குறதை காட்டுவாங்க. ஆனா வெள்ளைக்காரனுக்கு அப்படி இல்லை. கொலைனா கொலைய தான் காட்டுவான், மேட்டர்னா மேட்டர்தான். (சிம்பாலிக்கா சில வெள்ளைக்கார இயக்குனர்கள் காட்டுவாங்க, ஆனா அது அவங்களுக்கு ஒரு மேண்டேட் (mandate)கெடையாது) அவங்க ஊரில, “ஐ வான்ட் யு டூ ட்ரா மீ லைக் ஒன் ஆப் யுவர் ப்ரெஞ்ச் கெர்ல்ஸ், வேரிங்க் திஸ்” (I want you to draw me like one of your French girls. Wearing this) அப்படி சொன்னா டிரா மீ வித் த டைமண்ட் தான். வேற எதுவுமே இருக்காது, அதை மாதிரி தான் கவுதம் இந்த படத்தை எடுத்து இருக்காரு.

இந்த படத்துல சொல்ல வர மேட்டர் புதுசு தான், அதுனால மேட்டரையே காட்டிட்டு இருக்கணுமா என்ன?

திரைக்கதை அப்படின்னு ஒரு விஷயம் சினிமாவில இருக்கு, அதை மறந்திட்டாரு போல.. படம் முழுசும், ஒரு திருப்பம் கூட இல்லாம, நம்ம எதிர்ப்பார்த்த மாதிரியே போகுது.

சைக்கோவின் பார்வைல சொல்றேன்னு சொல்லி நம்மளை சாவடிக்குறாங்கப்பா….

சரி, இந்த படத்தோட கதை என்னன்னா….

வன்புணர்ச்சி—தற்கொலை—வன்புணர்ச்சி—கொலை—மேட்டர்—கொலை—மேட்டர்—கொலை—வன்புணர்ச்சி முயற்சி—ஒரு மொக்கை விளக்கத்தோட கிளைமேக்ஸ்.

இதுதான் கதை..

ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சயுடனேயே கவுதமுக்கு ரிசல்ட் தெரிஞ்சு இருக்கும். ஆனா இந்த மூனரைக்கோடியை ஒரே வார இறுதியில எடுத்துடலாம், தமிழின் புது முயற்சி அப்படி சொல்லி விளம்பரபடுத்திகலாம்-னு எடுத்து இருப்பாரு போல…ஒரு வேளை இந்த ஸ்கிரிப்டை வீரா (இல்லை சமர்) எழுதி காசும் குடுத்து கவுதமை எடுக்க சொல்லி இருப்பானோ? பையனுக்கு ஒடம்பெல்லாம் மச்சம் :P

எனக்கு தெரிஞ்சு இந்த படத்தோட கிரெடிட்ஸ் இப்படித்தான் போடனும்.

மீனாட்சி அம்மா – சைக்கோ (1960)
சமீர்/வீரா (நடிப்பு) – ஆளவந்தான் & கஜினி
சமீர்/வீரா (கதை) – சிகப்பு ரோஜாக்கள், கொஞ்சம் மன்மதன்…
சமீர்/வீரா (கான்செப்ட்) – அந்நியன் & குடைக்குள் மழை

படத்துல இசை இல்லை என்பது மட்டும் தான் புதுசான மேட்டரே தவிர புதுசா இந்த படத்துல எந்த மேட்டரும் இல்லை.

சென்சார் போர்டு ஆபிஸருங்க எல்லாரும், ஒலக சினிமா / இந்தி சினிமா பாத்து ரொம்பவே மாறிட்டாங்களா இல்லை கத்திரியை மறந்திட்டாங்களா?

கவுதம் “ஓ*&%” “உ*&^%$” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துறதை கிளிச்சே (Cliché) வாகவே மாத்திட்டாரு போல..படம் முழுக்க தப்பை காட்டிட்டு, இப்படியெல்லாம் நடக்குது ஜாக்கிரதை அப்படின்னு ஒரு குரல். அது தான் படத்தோட உச்ச கட்ட காமெடி..வரவர தமிழ் சினிமால காம கதைகள் நிறைய வர மாதிரி தெரியுது, அது தப்பில்லை, ஆனா அந்த கதைகளையே கொஞ்சம் சுவாரஸ்யமா, வக்கிரம் இல்லாம காமிச்சா இன்னும் நல்லா இருக்கும். இதே மாதிரி படம் எடுத்தா சாமி கூட்டத்துல போய் சேர வேண்டியது தான் கவுதமும்.டி.

ஆர். ராஜகுமாரிக்கிட்ட கவர்ச்சியா நடிக்க சொல்லியிருந்தா செருப்பால அடிச்சு இருப்பாங்க, ஆனா காஞ்சனாக்கு அப்புறம் அது சாதரணமான ஒரு விஷயமா மாறிடுச்சு.
சிவாஜி காலத்துல உதட்டோடு உதடு வைப்பது எல்லாம் இல்லை, ஆனால் அவரோட கலைவாரிசால இப்போ அது சாதரணமான ஒரு விஷயமா மாறிடுச்சு.
அதே மாதிரி தான் இந்த கதைகளும், சில வருடங்களில் பழகிடும், ஆனாலும், இந்த மாதிரி வக்கிரத்தை ரசிக்காத பலரும் இருக்கத்தான் செய்வார்கள்.

இந்த படத்தை பத்தி ஒரே வரில சொல்லணும்னா, “This is a dull and dumb expression of the Director’s dirty obsession about sex and nothing else….”

காவலன் -- விமர்சனம்

ஆளும்கட்சி சதி, திரையரங்க முதலாளிகளின் கோரிக்கைகளை கடந்து, ஒரு நாள் தாமதமாக வந்த இளைய தளபதியின் படம். சுறாவில் பயங்கரமாக அடிப்பட்ட தளபதியின் இந்த படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை என்பது தான் உண்மை. எத்தனை முறை தோற்றாலும் ஒரே மாதிரி படங்களிலேயே நடித்தால் இவரை கடவுள் கூட காப்பாற்ற முடியாது என்ற நிலையில் வந்த இந்த படம் எப்படி இருக்கு?
ஒரு வெற்றி கதாநாயகனுக்கு தொடர்ந்து பல காலமாக வெற்றி கிட்டவில்லையென்றால், தனக்கு மிகவும் நம்பிக்கை தரும் இயக்குனரிடம் சென்று சரணடைவது வழக்கம் [அஜீத் – ரவிக்குமாரிடம் செல்வது போல]. 10 வருடங்கள் கழித்து, சித்திக், விஜய்க்கு மீண்டும் ஒரு ப்ரெண்ட்ஸ்-ஐ உருவாக்கி கொடுத்து இருக்கிறாரா?
சச்சினுக்கு பிறகு, விஜய் அமைதியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம். ரொம்ப ஆரவாரம் இல்லாம அமைதியான, ஒரு விரும்பத்தக்க கதாபாத்திரத்தில நடிச்சு இருக்குற விஜயை கண்டிப்பாக பாராட்டியே தீரணும். இந்த பூமிநாதன், எல்லாருக்கும் பிடிக்குற ஒரு அழகான, cute-ஆன ஒரு கதாபாத்திரம். ரொம்ப உண்மையான ஒரு characterization. இந்த கதாபாத்திரத்தை எல்லாருக்குமே பிடிக்கும், காரணம் அவன் அவ்வளவு நல்லவன். அப்பாவி, பொய் பேசாதவன், நம்புனவங்களை எப்பவுமே சந்தேக படாத ஒரு நல்லவன். இந்த கதையின் அடிப்படையே இவனுடைய இந்த இயல்பு தான். அதனால, இவன் ஒன்னும் அம்மாஞ்சி இல்லை. நடனம், சண்டை-ணு கதாநாயகணுக்கு தேவையான எல்லா வித்தையும் தெரிஞ்சவன் தான் இந்த பூமி, ஆனாலும் வெள்ளந்தியான மனசு இவனுடையது. இந்த மாதிரி கதாநாயகனுடைய இயல்பை வைத்து கதை பிண்ணுவது தமிழுக்கு கொஞ்சம் புதுசு.
கதை ரொம்ப சாதரனமான ஒன்னு தான். தன்னையும் தன் தாயையும் காப்பாற்றிய ராஜ்கிரனுக்கு ஒரு ஆபத்து என்ற உடன் அவர் வீட்டிற்கு சென்று அவருக்கு காவலனாக இருக்க முடிவு செய்கிறார் விஜய். அவர் பெண்ணின்(அசின்) உயிருக்கு ஆபத்து என்ற உடன் அவளுடன் அவள் கல்லூரிக்கு அனுப்பப்படுகிறார்.அங்கே இது பிடிக்காத அசின், வேறு ஒரு பெண் மாதிரி தொலைபேசியில் விஜயுடன் காதல் செய்வது போல நடிக்கிறார். ஒரு கட்டத்தில், இருவரும் உண்மையிலேயே காதலில் விழுகிறார்கள். வித்தியாசமான பெரிய கிளைமேக்ஸுடன் படம் முடிகிறது. முடிவில் கொஞ்சம் குச் குச் ஹோத்தா ஹை…
அசின் வழக்கம் போல கொஞ்சம் ஓவர் ஆக்டிங், ஆனாலும் சில காட்சிகளில் ரொம்ப அழகாக நடித்து இருக்கிறார். அந்த பூங்கா காட்சி ஒரு உதாரணம்.
ராஜ்கிரனும் ரோஜாவும் படத்தில் வந்து போகிறார்கள்.
வடிவேலுவின் நகைச்சுவை நம்மை கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.
உண்மையிலேயே இது ஒரு மலையாள படம் தான். இந்த படத்தின் கதை, இதில் வரும் கிளைமேக்ஸ் எதுவுமே அவ்வளவாக தமிழுடன் ஒட்டவில்லை. ஒரு புது முகம் நடித்து இருந்தால், வந்த உடனே பெட்டிக்குள் சென்று இருக்கும் இந்த கதை. பார்க்காமல் காதலிப்பது எல்லாம் தமிழில் அகத்தியன், சிவசக்தி பாண்டியனோடு முடிந்து விட்டது. ஆனால், விஜய் நடித்து இருப்பதால் அவரது ரசிகர்களுக்காகவே 4 சண்டை, கொஞ்சம் நடனம் எல்லாம் சேர்த்து கொஞ்சம் தமிழ் படுத்தியிருக்காங்க. இருந்தாலும், அந்த முதல் பாட்டும், சண்டையும் படத்தோட ஒட்டவே இல்லை. ரெண்டாவது பாதியில வர அந்த டான்ஸ் பாட்டும் தேவையில்லாத ஒன்று. இந்த கதை மலையாளத்தில் இருந்து வந்திருந்தாலும் வழக்கமாக அவர்கள் படங்களில் இருக்கும் பஞ்ச் இந்த படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங். சித்திக் படம்னா விஜயோட கெட்-அப்பை கண்டிப்பா மாத்தணும் என்று கடைசியில் அவரை வித்தியாசமாக காட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ப்ரென்ட்ஸ் மாதிரி அவ்வளவு மோசம் இல்லை, ஆனாலும் தவிர்த்து இருக்கலாம்.
படத்தின் கதாநாயகன் இல்லை விஜய், ஆனால் கதையின் நாயகன். இந்த மாதிரி ஒரு கதைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு இவர் வெற்றி பெற்றுள்ளார் என்று தான் சொல்லணும். இவரோட ஸ்மைல் மற்றும் நடிப்பு சூப்பர். இவ்வளவு நாளா எங்க/ஏன் சார் ஒளிச்சு வச்சு இருந்தீங்க இந்த நடிப்பை? வழக்கம் போல டான்ஸ்ல பிச்சு உதறி இருக்கிறார் விஜய். சண்டை காட்சிகள் (தேவை இல்லையென்றாலும் கூட) பிரமாதம். அந்த அம்முகுட்டி கதாபாத்திரத்தை சின்ன வயசுல இருந்து இந்த பெரிய வயசுல இனைச்ச விதம் நல்லா இருந்துச்சு.
பாடல்கள் இந்த படத்துக்கு ஒரு நல்ல பலம். யாரது யாரது, மற்றும் சடா சடா ரெண்டும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ரகம். க்யூட் பாடல்களின் ரகத்தில் சேர்க்கப்பட வேண்டியவை. மற்ற பாடல்கள் சுமார்.
ஒரு கைதேர்ந்த நடிகனால் சுமாரான கதையை கூட தனது முதுகில் ரெண்டரை மணி நேரம், சுமக்க முடியும் என மீண்டும் நிரூபித்து இருக்கிறது இந்த படம். அந்த பார்க் காட்சி, அப்புறம் காதலின் தவிப்பு, காதலின் வலி என்று பல காட்சிகளில் விஜயின் நடிப்பு தரம். அந்த கண்களின் துறுதுறுப்பில் நூற்றுக்கு நூறு பெற்று விட்டார்.
காவலன் இவன் காதலன்.. கண்டிப்பாக பாருங்கள் விஜயின் நடிப்பிற்காக.