Thursday, February 24, 2011

நடுநிசி நாய்கள் -- விமர்சனம்

சைல்ட் அப்யுஸ் (Child Abuse) என்ற விஷயமே தமிழ் சினிமாக்கு ரொம்ப புதுசு. நம்மை பொறுத்தவரை பெண் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பாதது, வேலைக்கார பையனுக்கு சட்டை வாங்கி தராதது போன்ற விஷயங்களே நம்மை எல்லாம் சங்கடபடுத்தும். ஆனாலும் குழந்தைகளுக்கு எதிராக இந்த மாதிரி செக்ஸ் டார்ச்சர் பல இடங்களில் நடந்துட்டு தான் இருக்கு. இந்த மாதிரி ஒரு கதையை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் கொண்டு வந்த கவுதமுக்கு ஒரு சபாஷ்.

நெத்திபொட்டுல அடிச்ச மாதிரி கதை சொல்லுறதும் நம்ம சினிமாக்கு கொஞ்சம் புதுசு தான். (சிலர் இதுக்கு முன்னாடியே இப்படி கதை சொல்லி இருக்காங்க)படத்தோட ஒட்டத்தை தடுக்குற மாதிரி பாட்டும், படத்துக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாம வர சிரிப்பு காட்சிகளும் இல்லாம எடுத்ததுக்கு இன்னுமொரு சபாஷ்.

நம்ம சினிமாவிலும் சரி, கலாச்சாரத்திலும் சரி எல்லாமே இலைமறை காய் தான். முதலிரவு காட்சியை காட்டனும்னா ரெண்டு குருவிங்க முத்தம் குடுக்குறதை காட்டிட்டு விளக்கை அனைச்சிடுவாங்க.. வன்புணர்ச்சியை காட்டனும்னா ஒரு ஓநாய் இல்லை புலி ஆட்டை அடிக்குறதை காட்டுவாங்க. ஆனா வெள்ளைக்காரனுக்கு அப்படி இல்லை. கொலைனா கொலைய தான் காட்டுவான், மேட்டர்னா மேட்டர்தான். (சிம்பாலிக்கா சில வெள்ளைக்கார இயக்குனர்கள் காட்டுவாங்க, ஆனா அது அவங்களுக்கு ஒரு மேண்டேட் (mandate)கெடையாது) அவங்க ஊரில, “ஐ வான்ட் யு டூ ட்ரா மீ லைக் ஒன் ஆப் யுவர் ப்ரெஞ்ச் கெர்ல்ஸ், வேரிங்க் திஸ்” (I want you to draw me like one of your French girls. Wearing this) அப்படி சொன்னா டிரா மீ வித் த டைமண்ட் தான். வேற எதுவுமே இருக்காது, அதை மாதிரி தான் கவுதம் இந்த படத்தை எடுத்து இருக்காரு.

இந்த படத்துல சொல்ல வர மேட்டர் புதுசு தான், அதுனால மேட்டரையே காட்டிட்டு இருக்கணுமா என்ன?

திரைக்கதை அப்படின்னு ஒரு விஷயம் சினிமாவில இருக்கு, அதை மறந்திட்டாரு போல.. படம் முழுசும், ஒரு திருப்பம் கூட இல்லாம, நம்ம எதிர்ப்பார்த்த மாதிரியே போகுது.

சைக்கோவின் பார்வைல சொல்றேன்னு சொல்லி நம்மளை சாவடிக்குறாங்கப்பா….

சரி, இந்த படத்தோட கதை என்னன்னா….

வன்புணர்ச்சி—தற்கொலை—வன்புணர்ச்சி—கொலை—மேட்டர்—கொலை—மேட்டர்—கொலை—வன்புணர்ச்சி முயற்சி—ஒரு மொக்கை விளக்கத்தோட கிளைமேக்ஸ்.

இதுதான் கதை..

ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சயுடனேயே கவுதமுக்கு ரிசல்ட் தெரிஞ்சு இருக்கும். ஆனா இந்த மூனரைக்கோடியை ஒரே வார இறுதியில எடுத்துடலாம், தமிழின் புது முயற்சி அப்படி சொல்லி விளம்பரபடுத்திகலாம்-னு எடுத்து இருப்பாரு போல…ஒரு வேளை இந்த ஸ்கிரிப்டை வீரா (இல்லை சமர்) எழுதி காசும் குடுத்து கவுதமை எடுக்க சொல்லி இருப்பானோ? பையனுக்கு ஒடம்பெல்லாம் மச்சம் :P

எனக்கு தெரிஞ்சு இந்த படத்தோட கிரெடிட்ஸ் இப்படித்தான் போடனும்.

மீனாட்சி அம்மா – சைக்கோ (1960)
சமீர்/வீரா (நடிப்பு) – ஆளவந்தான் & கஜினி
சமீர்/வீரா (கதை) – சிகப்பு ரோஜாக்கள், கொஞ்சம் மன்மதன்…
சமீர்/வீரா (கான்செப்ட்) – அந்நியன் & குடைக்குள் மழை

படத்துல இசை இல்லை என்பது மட்டும் தான் புதுசான மேட்டரே தவிர புதுசா இந்த படத்துல எந்த மேட்டரும் இல்லை.

சென்சார் போர்டு ஆபிஸருங்க எல்லாரும், ஒலக சினிமா / இந்தி சினிமா பாத்து ரொம்பவே மாறிட்டாங்களா இல்லை கத்திரியை மறந்திட்டாங்களா?

கவுதம் “ஓ*&%” “உ*&^%$” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துறதை கிளிச்சே (Cliché) வாகவே மாத்திட்டாரு போல..படம் முழுக்க தப்பை காட்டிட்டு, இப்படியெல்லாம் நடக்குது ஜாக்கிரதை அப்படின்னு ஒரு குரல். அது தான் படத்தோட உச்ச கட்ட காமெடி..வரவர தமிழ் சினிமால காம கதைகள் நிறைய வர மாதிரி தெரியுது, அது தப்பில்லை, ஆனா அந்த கதைகளையே கொஞ்சம் சுவாரஸ்யமா, வக்கிரம் இல்லாம காமிச்சா இன்னும் நல்லா இருக்கும். இதே மாதிரி படம் எடுத்தா சாமி கூட்டத்துல போய் சேர வேண்டியது தான் கவுதமும்.டி.

ஆர். ராஜகுமாரிக்கிட்ட கவர்ச்சியா நடிக்க சொல்லியிருந்தா செருப்பால அடிச்சு இருப்பாங்க, ஆனா காஞ்சனாக்கு அப்புறம் அது சாதரணமான ஒரு விஷயமா மாறிடுச்சு.
சிவாஜி காலத்துல உதட்டோடு உதடு வைப்பது எல்லாம் இல்லை, ஆனால் அவரோட கலைவாரிசால இப்போ அது சாதரணமான ஒரு விஷயமா மாறிடுச்சு.
அதே மாதிரி தான் இந்த கதைகளும், சில வருடங்களில் பழகிடும், ஆனாலும், இந்த மாதிரி வக்கிரத்தை ரசிக்காத பலரும் இருக்கத்தான் செய்வார்கள்.

இந்த படத்தை பத்தி ஒரே வரில சொல்லணும்னா, “This is a dull and dumb expression of the Director’s dirty obsession about sex and nothing else….”

No comments:

Post a Comment